திண்டுக்கல் மாவட்டம் பழைய வக்கம்பட்டி கிராமத்தில் தென்னந்தோப்பு ஒன்று உள்ளது. அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆணின் சடலம் இருப்பதைக் கண்ட தோட்டக்காரர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் வந்த போலீசார் கல்லால் அடித்து தலையை தூண்டித் ஆக்ரோஷமாக கொலை செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளி யார்? ஆகிய கேள்விகள் எழும்பியது. அப்பகுதி மக்களின் தகவலின் பெயரிலும் அடையாளங்கள் வைத்தும் இறந்தவர் மிக்கேல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. உடலை மட்டும் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர் தலையை தீவிரமாக தேடி வருகின்றனர்.
விசாரணையில் சில துப்புகள் கிடைத்துள்ளது. சம்பவதன்று இரவு சிவக்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை கைகலப்பாக மாறியதாகவும் உள்ளூர் மக்களில் ஒருவர் கூறியுள்ளார் தகவலின் பெயரில் போலீசார் தனிப்படை கொண்டு சிவக்குமாரின் சிலர் நண்பர்களை பிடித்து விசாரித்ததில் கொலையாளிகள் வசமாக சிக்கிக் கொண்டனர். ஏழு பேர் கொண்ட நண்பர்கள் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அதில் கோபி கண்ணன் என்பவரின் தாயை சிவக்குமார் தகாத வார்த்தையால் திட்டி உள்ளார்.
அதன் பெயரில் ஆத்திரம் அடைந்த கோபிக்கண்ணன் மற்றும் சூர்யா என்பவரும் சேர்ந்து சிவக்குமாரை சரக்கு உள்ளது என்று கதை சொல்லி தென்னந்தோப்புக்கு வரவழைத்துள்ளனர். உண்மை என்று நம்பிய வந்த சிவக்குமாரை கொடூரமாக கல்லைக் கொண்டு தலையில் தாக்கிய நிலைகுலைய உளுந்தவுடன். கழுத்தை அரித்து தலையை துண்டித்துள்ளனர். உடலை அங்கேயே போட்டுவிட்டு சுமார் 50 மீட்டர் தொலைவில் தலையை மட்டும் குழி தோண்டி புதைத்து விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். அதன் பெயரில் போலீசார் கோபி கண்ணன் மற்றும் சூர்யா உள்ளிட்டோரை கைது செய்த மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். போதையில் நண்பனின் தாயை தகாத வார்த்தையில் பேசியதால் நண்பனையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
