மது குடிப்போரின் வாக்குகள் தனக்குத் தேவையில்லை என்றும், கண்ணியமான நல்ல குடிமக்களின் வாக்குகள் மட்டுமே போதும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிரடியாகப் பேசியுள்ளார். தமிழக அரசு டாஸ்மாக் மூலம் ஈட்டும் சுமார் 50,000 கோடி ரூபாய் வருமானத்தைக் கொண்டே திமுக ஆட்சியை நடத்துவதாகக் குற்றம்சாட்டிய அவர், மதுப்பழக்கம் தமிழ் மக்களின் உழைக்கும் திறனை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டதாகக் கவலை தெரிவித்தார்.
மேலும், திமுகவைப் போல முறையற்ற வழிகளில் நிதி திரட்டித் தான் கட்சி நடத்தவில்லை என்றும், சாமானிய மக்களிடம் திரள் நிதியாகப் பெற்று வெளிப்படையான முறையில் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்த உரை அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
