CINEMA
‘இந்தப் படத்தை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்’…. ட்விட்டரில் நடிகர் சூர்யா பதிவு.. எந்த படம் உங்களுக்கு தெரியுமா?…
நடிகர் சூர்யா தனது twitter பக்கத்தில் சிம்பு நடிப்பில் இன்றைய தினம் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தை பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தில் சிம்பு ‘முத்து’ என்ற கதாபாத்திரத்திலும் ,ஹீரோயினாக நடிகை சித்தி இத்னானி,சிம்புவின் அம்மாவாக ராதிகா போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளனர். இப்படத்தை வைசரி கணேஷ் தனது வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக நல்ல விமர்சனங்களை பெற்று ஓடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் நடிகர் சூர்யா வெந்து தணிந்தது காடு படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘வெந்து தணிந்தது காடு படம் பற்றி நல்ல விஷயங்களை கேள்விபடுகிறேன்.
படத்தை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளேன். இயக்குனர் கௌதம் மேனனுக்காக மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிகப்பெரிய வெற்றி அடைந்த இப்படத்திற்கு உழைத்த படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சூர்யாவின் இந்த பதிவு தற்போது சிம்பு ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
Hearing such good things about #VTK.. Waiting to watch.. Happy for @menongautham
Rock on @silambarasanTR_ Best wishes for a huge success team!! @arrahman sir @VelsFilmIntl @RedGiantMovies_— Suriya Sivakumar (@Suriya_offl) September 15, 2022