அமமுகவில் திடீர் பூகம்பம்…. “கட்சியே என் கைலதான் இருக்கு”….. TTV தினகரனை அலறவிட்ட முன்னாள் MLA காமராஜ்…!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

அமமுகவில் இருந்து தம்மை டிடிவி தினகரன் நீக்கியதாக அறிவித்துள்ள நிலையில், “உண்மையான அமமுக என் வசம் தான் இருக்கிறது” எனக் கூறி முன்னாள் எம்.எல்.ஏ காமராஜ் தமிழ்நாடு அரசியலில் புதிய புயலைக் கிளப்பியுள்ளார். விரைவில் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டித் தனது பலத்தை நிருபிப்போம் என்று சவாலிட்ட அவர், “மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு என்ன நடந்ததோ, அதேபோன்ற அதிரடி அரசியல் திருப்பம் இங்கேயும் நடக்கும்; அதை விரைவில் சபாநாயகரே அறிவிப்பார்” எனத் தெரிவித்து ஆளுங்கட்சி மற்றும் அமமுக வட்டாரங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.