பதவி பறிபோகும் 3 அமைச்சர்கள்?…. CM விஜய் எடுத்த அதிரடி முடிவு….. பட்ஜெட் முடிஞ்சதும் தூக்கல்?…. அமைச்சரவையில் மெகா மாற்றம்….!

By Nanthini on ஆடி 25, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தகவல்களின்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் 10 அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது; குறிப்பாக, தென்மாவட்டத்தைச் சேர்ந்த பெண் அமைச்சர் ஒருவர் மற்றும் சென்னையைச் சேர்ந்த இரு அமைச்சர்களைப் பதவியிலிருந்து அதிரடியாக நீக்க அவர் முடிவெடுத்துள்ளதாகவும், மீதமுள்ள 8 அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் கசிகின்றன.

வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்த உடனேயே இந்த அமைச்சரவை மாற்றங்கள் முறைப்படி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய அமைச்சர்களுக்கான பட்டியலும் தவெக தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.