நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமார், தான் அரசியலில் இருந்து முழுமையாக ஒதுங்கிவிட்டதாகக் கூறியுள்ளது பாஜக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், “அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் அரசியலில் இல்லை, ஒதுங்கிவிட்டேன்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்த பிறகும் சரத்குமாருக்குக் கட்சியில் எதிர்பார்ப்பிற்குரிய முக்கியப் பதவிகள் எதுவும் வழங்கப்படாததால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், அவரது இந்த திடீர் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
