ஹைதராபாத்தில் உள்ள அம்பர்பேட்டை, திருமல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிபாஷ். ஆயுதப்படை காவலராகப் பணியாற்றி வந்த இவர், தனது வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாகவே மனமுடைந்து அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்கொலை செய்துகொள்வதற்குச் சற்று முன்பு, நிபாஷ் தனது முடிவை வாட்ஸ்அப் வாயிலாக நண்பர்களுக்கு குறுஞ்செய்தியாகத் தெரிவித்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இதுதொடர்பான விவரங்களைச் சேகரித்து உடலைக் கைப்பற்றினர். தற்போது, உயிரிழந்த காவலரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…