சந்தேகப்பட்டு வீட்டுக்குள் பூட்டி வைத்த கணவர்.. திருமணமான இரண்டே மாதத்தில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. சோக சம்பவம்…!

Spread the love

காரைக்காலை அடுத்த வரிச்சிக்குடி க்ரீன் கார்டன் 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மனைவி குமாரி. இவர்களது மகள் ஹேமா (28). இவருக்கும், கும்பகோணம் அம்மாபேட்டையை சேர்ந்த செல்வமுத்துக்குமரன் (31) என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த மே மாதம் 23-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. செல்வ முத்துக்குமரன் பெங்களூரில் உள்ள ஐடி கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். எனவே திருமணத்திற்குப் பிறகு ஹேமா கணவருடன் பெங்களூரில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஹேமா மீது செல்வமுத்துக் குமரன் சந்தேகப்பட்டு , அவர் வேலைக்குச் செல்லும் போது வீட்டுக்குள் வைத்து பூட்டிச் சென்றுள்ளார். மேலும் அவரது செல்போனை வாங்கி உடைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தனது தாயிடம் குமாரி சொல்லி அழுதுள்ளார். இது குறித்து தனது மாமியாரிடமும் குமாரி கூறியுள்ளார். அவர் பெங்களூர் சென்று கணவன், மனைவியை சமாதானம் செய்து ஹேமாவை அழைத்து வந்து ஆடி மாதத்திற்காக அவரது பெற்றோர் வீட்டில் விட்டுள்ளார்.

கணவரின்  கொடுமையால் மன வருத்தத்தில் இருந்த ஹேமா இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசில் குமாரியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக காரைக்கால் துணை தாசில்தார் விசாரணை நடத்தி வருகிறார். கணவனின் சந்தேகத்தால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Divyamayakannan

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

8 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

8 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

8 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago