தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…! மருமகளின் கை,கால்களை கட்டி தூக்கில் தொங்கவிட்ட கணவர் குடும்பத்தினர்… 1 வருடத்திற்கு பிறகு அம்பலமான உண்மை… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

By Devi Ramu on ஐப்பசி 7, 2026

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் கடந்த செப்டம்பர் 16, 2025 அன்று மனிஷா தேவி என்ற பெண் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அப்போதைக்கு இது தற்கொலை எனக்கூறி வழக்கை மறைக்க முயன்ற நிலையில், சுமார் 1 ஆண்டுக்கு பிறகு தற்போது ஒரு திடுக்கிடும் வீடியோ ஆதாரம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இரு பெண்கள் உட்பட மூவர் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி சித்திரவதை செய்யும் காட்சிகள் பதிவாகியுள்ளன. கணவர் வீட்டைச் சேர்ந்தவர்களே அப்பெண்ணைக் கொடுமைப்படுத்திப் படுகொலை செய்துவிட்டு, தற்கொலை எனப் பொய் பிரச்சாரம் செய்தது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. இவ்வீடியோ ஆதாரத்துடன் இறந்த பெண்ணின் சகோதரன் பூரன் குமார் சிங் அளித்த புகாரின் பேரில், சங்கராம்பூர் காவல்துறையினர் அண்டை வீட்டாரான ரித்திக் குமார், நீது குமாரி, கிரண் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.