போலீஸ் தூங்குதா?… இப்படி ஒரு திருடனா?… ‘Modern’ திருடன்… Password கேட்ட நபர்… பட்டப்பகலில் ஐபோன் திருட்டு… நடுரோட்டில் நடந்த விபரீதம்…!!

By Gayathri on ஐப்பசி 7, 2026

Spread the love

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு சந்தைப் பகுதியில் கௌஷிகி தியானி என்பவரின் ஐபோன் அண்மையில் திருடுபோனது. இந்த விவகாரத்தில் எதிர்பாராத திருப்பமாக, செல்போனைத் திருடிய மர்ம நபர் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரடியாகத் தொடர்புகொண்டு, கைபேசியைப் பயன்படுத்த அதன் கடவுச்சொல்லைத் தருமாறு கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். திருடிய பொருளைத் தடையின்றிப் பயன்படுத்த திருடனே உரிமையாளரை நாடிய இந்த வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை ‘Kaushiki_28’ என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியாகப் பகிர்ந்துள்ள கௌஷிகி, உள்ளூர் காவல்துறையின் அலட்சியப் போக்கையும் கடுமையாகச் சாடியுள்ளார். அக்குறிப்பிட்ட பகுதியில் தொடர்ந்து குற்றச்செயல்களும் கைபேசித் திருட்டுகளும் அரங்கேறி வரும் சூழலிலும், ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவோ திருடர்களைக் கைது செய்யவோ போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்.