நள்ளிரவில் வெடித்த சண்டை… மது போதையில் கணவன் வெறிசெயல்… பெண் காவலருக்கு நேர்ந்த பயங்கரம்… சென்னையில் பகீர் சம்பவம்…!!

Spread the love

சென்னை அயனாவரம் பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு, பெண் காவலர் மீதான வன்முறையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரத்தைச் சேர்ந்த 30 வயதான சத்யா, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் புருசோத்தமன் வேலைக்குச் செல்லாமல், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி சத்யாவுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று நள்ளிரவில் போதையில் வீட்டிற்கு வந்த புருசோத்தமன், சத்யாவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் சத்யாவின் கையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சத்யா, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த புருசோத்தமனை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Muthu Mani

Recent Posts

“ரேஷன் கார்டு ரிஜெக்ட் ஆகிடுச்சா?… இனி கவலை வேண்டாம்”… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் சில காரணங்களால் நிராகரிக்கப்படும் சூழலில், அவற்றை எளிமையான முறையில் சரிசெய்து…

38 seconds ago

10-வது முடித்திருந்தால் போதும்.. மத்திய அரசு வேலை ரெடி… 3,003 காலிப்பணியிடங்கள்… மே 4 கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க… எஸ்.எஸ்.சி-யின் மெகா அறிவிப்பு…!!!

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப் (MTS), பெர்சனல் அசிஸ்டண்ட்…

8 minutes ago

“ஈரானுக்கு இனி ஆயுதங்கள் கிடையாது?… சீன அதிபருடன் டிரம்ப் போட்ட டீல் என்ன?”… 8 ஆண்டுகளுக்குப் பிறகு சீனா செல்லும் டிரம்ப்…!

மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஹார்முஸ் நீரிணையைத் திறந்து வைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிக்குச் சீனா தனது…

11 minutes ago

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

16 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

17 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

18 minutes ago