இங்கிலாந்தில் வாடகைக்கு விடப்படும் கணவன்கள்; இது சூப்பர் திட்டமா இருக்குதேங்க…

By Elango on மார்கழி 8, 2025

Spread the love

இங்கிலாந்தில் வாடகைக்கு கணவன்கள் விடப்படுகின்றனர். இந்த சேவை திட்டம் அந்த நாட்டில் நீண்ட காலமாக செயல்பாட்டில் இருந்து வருகிறது husband for hire, hire of hubby என்ற பெயர்களில் இந்த சேவைகளையும் வழங்கும் நிறுவனங்கள் பிரிட்டனில் செயல்படுகின்றன. வீட்டில் பொதுவாக கணவர்கள் செய்யும் வேலைகளை செய்து முடிப்பதற்காக ஒரு திறமையான நபரை கட்டணம் கொடுத்து வேலைக்கு அமர்த்தும் சேவைக்கு பெயர் தான் வாடகைக்கு விடப்படும் கணவன் என்ற திட்டம்.

ஆனால் வெளியில் இதுபற்றி சிலர் தவறாக புரிந்து கொள்கிறார்கள். வீடுகள் அல்லது அலுவலகங்களில் செய்ய வேண்டிய சின்ன சின்ன பழுதுபார்க்கும் வேலைகள், சீரமைப்பு பணிகள், பர்னிச்சர் பொருட்களை இணைத்தல், பெயிண்டிங், பிளம்பிங், எலக்ட்ரிக்கல் போன்ற வேலைகளை செய்வதற்காக இந்த சேவை பயன்படுத்தப்படுகிறது. தனிமையில் இருக்கும் பெண்கள் மிகவும் பிஸியாக இருக்கும் தம்பதிகள் அல்லது இந்த வேலைகளை செய்ய திறமை இல்லாதவர்கள் வாடகை கணவர்களை வேலைக்கு அமர்த்துவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

   

வேலைக்கு செலவிடப்படும் நேரத்தை பொறுத்து மணிக்கணக்கில் அல்லது நாள்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவைக்கு வாடகை கணவன்கள் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு காரணம், பாரம்பரியமாக மேற்கத்திய கலாச்சாரத்தில் வீடுகளில் உள்ள மின்சாரம், குழாய்கள் பழுதுபார்ப்பு போன்ற வேலைகளை பெரும்பாலும் வீட்டில் உள்ள ஆண்களே அதாவது கணவர்மார்களே கவனித்துக் கொள்வார்கள்என்ற காரணம்தான்.