காணாமல் போனதாக நாடகம்…மனைவியை நண்பர்களுக்கு விற்ற கணவன்.. காவல் நிலையத்தில் கொடுத்த “மிஸ்ஸிங்” புகாரால் வசமாக மாட்டிக்கொண்ட துரோகி..!

By Swetha on வைகாசி 28, 2026

Spread the love

குஜராத் மாநிலத்தில் கணவன் ஒருவன் தனது மனைவியையே நண்பர்களின் உதவியுடன் ₹50,000-க்கு விற்பனை செய்த அதிர்ச்சியூட்டும் குற்றச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பனஸ்கந்தா மாவட்டத்தின் பாலன்பூர் பகுதியைச் சேர்ந்த நிகேஷ் பட்டேல் என்ற நபர், தனது மனைவியுடன் 12 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, அவரை விவாகரத்து செய்யாமல் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்தக் குற்றத்தை மறைப்பதற்காக, தனது மனைவி திடீரென காணாமல் போய்விட்டார் என்று அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் மாயமானது குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவர்கள் தீவிர விசாரணையைத் தொடங்கினர். தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையிலும், தீவிர விசாரணையிலும் அந்த நபர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார்.

   

விசாரணையின் போது, கணவன் தனது மனைவியை ₹50,000-க்கு விற்றதை ஒப்புக் கொண்டார். மேலும், அந்த பெண் அவரது நண்பர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதும் தெரியவந்தது. உடனடியாகச் செயல்பட்ட போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பத்திரமாக மீட்டதோடு, இந்த மனிதக் கடத்தல் மற்றும் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய கணவன் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 7 பேரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.