தெலங்கானா மாநிலத்தில், மனைவி மற்றும் மகள்களை கொலை செய்துவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா விகாராபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் வேபுரி யாதய்யா. இவருடைய மனைவி அலிவேலு (31). இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று குடும்பத் தகராறு காரணமாக, தனது இரண்டு மகள்கள் அபர்ணா (13), ஸ்ராவாணி (10), மருமகள் ஹனுமாம்மா (40) ஆகியோரை கத்தியால் தாக்கி, பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில், மூத்த மகள் அபர்ணா மட்டும் உயிர் தப்பியுள்ளார்.
