2-வது கல்யாணத்திற்கு ஆசைப்பட்டு… மாமன் மகளைக் கொன்று புதைத்த கணவன்… திடுக்கிட வைக்கும் பகீர் வாக்குமூலம்…!!

Spread the love

பள்ளியில் ஒன்றாகப் படித்து வந்த ஒரு இளைஞனுக்கும், அவனது தாய்மாமன் மகளுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் காதலை அறிந்த இரு வீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவர்கள் ஒன்றாகப் படிப்பவதற்கும் தடை விதித்தனர். ஆனால், குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இறுதியில் முறைப்படி திருமணமும் செய்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, அந்த இளைஞனின் குடும்பத்தினர் அவரை இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளனர். இந்த விவகாரம் தெரியவந்ததும் தம்பதியரிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருநாள் தகுந்த சமயம் பார்த்துத் தனது மனைவியைத் தனியான இடத்திற்கு அழைத்துச் சென்ற அந்த இளைஞன், அவரைத் துடிதுடிக்கக் கொலை செய்துவிட்டு, உடலை அங்கேயே மறைத்து வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

மகளைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததோடு, மருமகன் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தனர். காவல்துறையினர் அந்த இளைஞனைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தியபோது, அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டு உடைந்து போனார். இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். உறவுமுறைக்குள் காதல் கொண்டு மணம் முடித்த தம்பதியின் வாழ்க்கை இவ்வளவு கொடூரமான முடிவைச் சந்தித்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

திமுக 49, அதிமுக 41.. ஆனால் தவெக 65… வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்திலேயே அதிர வைக்கும் தவெக…!!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்…

5 minutes ago

BREAKING: வில்லிவாக்கத்தில் ‘ஆதவ் அர்ஜுனா’ அதிரடி! தவெக முன்னிலையால் திணறும் திமுக, அதிமுக..!!

சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலை பெற்று வருகிறார். அவர்…

8 minutes ago

அரசு ஊழியர்களின் சாய்ஸ் ‘தவெக’..? ஒரத்தநாட்டில் முன்னிலையில் அரவிந்த் – ஆச்சரியத்தில் அரசியல் கட்சிகள்..!!

ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் அரவிந்த் தொடக்கத்திலிருந்தே முன்னிலை…

23 minutes ago

திராவிடக் கோட்டையில் ‘தளபதி’ ஆதிக்கம்: பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் அதிரடி முன்னிலை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வாக்கு…

26 minutes ago

BREAKING: தமிழகத்தில் தவெக முதலிடம்…. அதிரும் அரசியல் களம்….!!

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (மே 4, 2026) காலை 8 மணிக்குத் தொடங்கி…

35 minutes ago

BREAKING: தவெக முன்னிலையில் உள்ள தொகுதிகள்…. கலக்கத்தில் பெரிய தலைவர்கள்… !!

தபால் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பெரம்பூரில் விஜய், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன்,…

41 minutes ago