குஜராத்தில் நான்கு மாத வாடகை பாக்கியைச் செலுத்த முடியாமல், அதற்குப் பதிலாகத் தன் மனைவி மற்றும் மகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ய வீட்டு உரிமையாளருக்கு அனுமதி அளித்த கொடூர கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த இழிவான செயலைச் செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த மனசாட்சியற்ற கணவர் மற்றும் அவருக்கு அழுத்தம் தந்த வீட்டு உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
