“அவங்கள கொன்னுட்டேன்” மனைவி மற்றும் 2 பிள்ளைகளை வெட்டி கொன்றுவிட்டு சரணடைந்த கணவர்… தமிழகத்தில் காலையிலேயே கொடூரம்..!!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

அருப்புக்கோட்டையில் தன்னுடைய மனைவி மற்றும்  தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு காவல் நிலையத்தில் கணவர் சரணடைந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அருப்புக்கோட்டை மாவட்டம் திருவிந்தாள்புரத்தில்  வசிப்பவர் சுந்தரவேலு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும்  இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதி குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து வந்தநிலையில் சமீபகாலமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட குடும்ப பிரச்சினையின் காரணமாக சுந்தரவேலு தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை வெட்டி கொலை செய்துள்ளா.ர் பின்னர் தான் தான் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டி கொலை செய்தேன் என்று  காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார் . இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.