சேலம் மாநகர் களரம்பட்டி சலவையாளர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் ஜெயந்தி (40) தம்பதியினர், குகை பகுதியில் சொந்தமாகச் சமோசா கடை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகமடைந்த மகேந்திரனுக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று காலையிலும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சூழலில், ஆத்திரமடைந்த மகேந்திரன் நைலான் கயிற்றால் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார்.
பெற்ற குழந்தைகளின் கண்முன்னே ஜெயந்தி அலறித் துடித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்துத் தகவலறிந்து வந்த கிச்சிப்பாளையம் காவல்துறையினர், ஜெயந்தியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் நடிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், பல்வேறு சென்சார் சிக்கல்கள் மற்றும் தடைகளைக்…
கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள முதல்வர் விஜய்க்குப் போதிய விவரம் இல்லை என்று…
தமிழகத்தில் அரசியல் சூழல் பரபரப்படைந்துள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள…
தூத்துக்குடியில் கைதாகி மரணமடைந்த அருணாச்சலம் என்ற கைதியின் உயிரிழப்பு குறித்து, காவல்துறையினரால் தாக்கப்பட்டதாலேயே அவர் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும்…
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம், பத்லாபூர் சிர்காவ் பகுதியில் வசித்து வந்தவர் ஹரி ராம் சிங் (35). இவரது மனைவி…
நீட் மற்றும் பிற தகுதித்தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கிய போராட்டம், நாடு முழுவதும் பரவி பெரும்…