மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் அண்மைக்காலப் பேச்சுகள், அவர் அங்கம் வகிக்கும் தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன. சட்டசபைத் தேர்தலுக்குப் பின் தவெக கூட்டணியில் மதிமுக இணைந்த நிலையில், வைகோ பொதுவெளியில் வெளியிடும் சில கருத்துகள் தவெக தலைமைக்கும், குறிப்பாக முதலமைச்சர் விஜய்க்கும் தொடர்ச்சியாகச் சங்கடங்களை உருவாக்கி வருகின்றன. திமுக கூட்டணி வேண்டாம் என்ற தொடக்கக்கால நிலைப்பாட்டில் இருந்த துரை வைகோ, தேர்தலுக்குப் பின் வியூகங்களை மாற்றி தவெக பக்கம் கட்சியை நகர்த்திய சூழலில், தந்தையின் இந்த அதிரடிப் பேச்சுகள் அவருக்குப் பெருந்தலைவலியாக மாறியுள்ளன.
முக்கியமாக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ-க்களையும் பதவியை ராஜினாமா செய்யுமாறு விஜய் தன்னிடம் நேரடியாகக் கூறியதாக வைகோ பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசியது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த திமுக ஆளுநரிடம் புகார் அளிக்கும் அளவுக்கு நிலைமை கைமீறிப் போனது. மதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய மறுத்த நிலையில், வைகோவின் இந்த எதிர்பாராத ‘உளறல்’ தவெக கூட்டணிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், துரை வைகோவையும் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கூட்டணி மாற்றத்திற்குப் பிறகு, தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி பொறுப்பு மதிமுகவுக்குக் கிடைக்கும் என்று வைகோ பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால், அந்தப் பொறுப்பை ‘ஜனநாயகன்’ படத் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணாவுக்கு விஜய் வழங்கியதால் துரை வைகோ கடும் அப்செட் அடைந்தார். இருப்பினும், தவெக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியையாவது வைகோவுக்குப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் துரை வைகோ தீவிரமாகப் போராடி வருகிறார். இத்தகைய முக்கியத்துவமிக்க அரசியல் சூழலில் கட்சிக்கு மேலும் பின்னடைவு ஏற்படக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
இதன் காரணமாகவே, பொதுவெளிகளிலும் மேடைகளிலும் பேசும்போது மிகவும் நிதானத்தையும் கவனத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தனது தந்தை வைகோவுக்கு துரை வைகோ சில கண்டிப்பான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகக் கட்சி வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. தவெகவுக்கு அரணாக நிற்போம் என வைகோ அறிவித்திருந்தாலும், அவரது அரசியல் எதிர்காலத்தையும் கூட்டணியில் கட்சியின் செல்வாக்கையும் தக்கவைக்கத் துரை வைகோ எடுத்துள்ள இந்த ‘அதிரடி தற்காப்பு நடவடிக்கை’ தமிழ்நாட்டு அரசியலில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் இனோவா கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரமடைந்து வந்த குடும்பக் கடன் சுமையை சமாளிப்பதற்காக, வீட்டில் வளர்த்து வந்த பசுவை விற்க கணவர் எடுத்த…
சீனாவில் 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகையே உலுக்கிய ஒன்றரை வயதுக் குழந்தை மீதான கொடூரத் தாக்குதல் சம்பவம் குறித்த விவரங்கள்…
பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் செவ்வாய்க்கிழமை அன்று அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கேரள மாநிலத்தைச்…
பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…
ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…