“ராக்கி கட்ட வருவாள்” காத்திருந்த சகோதரர்… காலையில் வந்த செல்போன் அழைப்பு… சகோதரியின் கணவர் செய்த கொடூரத்தால் அதிர்ச்சி..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

ரக்ஷா பந்தன் தினத்தன்று, வடகிழக்கு டெல்லியின் கரவால் நகரில் உள்ள ஷாஹீத் பகத் சிங் காலனியில், ஒரு நபர் தனது மனைவி மற்றும் இரண்டு அப்பாவி மகள்களை கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிரதீப் காஷ்யப் மனைவி ஜெயஸ்ரீ (28) இவர்களின் பிள்ளைகள் இஷிகா (7) மற்றும் அந்து (5) . ஜெயஸ்ரீ ரக்ஷா பந்தன் அன்று தனது தாய் வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்று கணவரிடம் வற்புறுத்திக் கொண்டிருந்துள்ளார். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர் கோபத்தில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

கொலை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட கணவர் பிரதீப் காஷ்யப்பை (29) போலீசார் கைது செய்தனர். விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர் மூவரையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். ஜெயஸ்ரீயின் சகோதரர் சந்திரபான் இதுற்குய்து கூறுகையில், “பிரதீப் மது பழக்கம் மற்றும் சூதாட்டத்திற்கும் அடிமையானவர். இதற்காக ஜெயஸ்ரீயுடன் சண்டையிடுவது வழக்கம். பலமுறை அவளை வீட்டை விட்டு வெளியேற்றியும் வந்தார். அவரது இந்தப் பழக்கம்தான் கொலைக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது என்று கூறியுள்ளார்.

   

ஜெயஸ்ரீயின் சகோதரர் சந்திரபான் சகோதரிக்கு ராக்கி கட்டுவதற்காகக் காத்திருந்துள்ளார். ஆனால் காலையில் அவள் இறந்த செய்தியை கேட்டதும் உடைந்து போயுள்ளார். மேலும் அப்பாவி மருமகள்கள் இருவரும் இறந்த செய்தியைக் கேள்விப்பட்டபோது என் இதயம் உடைந்தது என்று கதறி அழுதுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.