அடப்பாவி இது என்னடா பகல் கொள்ளையா இருக்கு… சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த காரை OLX- ல் விற்ற பலே கில்லாடி..!

By Divyamayakannan on ஆவணி 10, 2025

Spread the love

சென்னை, வியாசர்பாடியில் வசித்துவரும் ரபேல் [63] என்பவர்.வீட்டின் அருகே பழுது பார்க்கும் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இதனிடையே, ராணி என்ற பெண் பழுதுபார்க்க 10நாட்களுக்கு முன்பு காரை ஒர்க்கஷாப்பில் விட்டுள்ளார். இந்நிலையில் அந்தக் கார் எதிரே இருந்த சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திடிரேன கடந்த 1ஆம் தேதி கார் காணாமல் போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரபேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வந்தனர். பிறகு கடலூர் மாவட்டம் வேப்பூரை சேர்ந்த அரவிந்த் என்பவர்தான் காரை திருடியது தெரியவந்துள்ளது. பின்னர் அரவிந்தை கைதுசெய்து விசாரித்ததில் பல விசித்திரமான தகவலை கூறியுள்ளார். பிரதீப் ராஜா என்பவர் ஓஎல்எக்ஸ் வலைத்தளத்தில் இக்காரின் புகைப்படத்தை போட்டிருந்தார். அதன் மூலமாக தான் காரை வாங்கினேன் என்று கூறியுள்ளார். ரூ.1.25 லட்சத்திற்கு காரை வாங்கினேன, நான் பழைய கார்களை வாங்கி பழுது பார்த்து விற்கும் விற்பனையாளர் என்று அவர் கூறியுள்ளார். இதனைதொடர்நது ஆவணம் இல்லாமல் காரை வாங்கியதற்காக அரவிந்தை போலீசார் கைது செய்தனர். சூதகமாக விற்ற பிரதிப் ராஜா என்பவரை போலீசார் தேடி வருகின்றன. அவர் யார்? அவர் எந்த ஊர்? என்று எதுவும் இதுவரை தெரியவில்லை.