நீ இங்க என்ன பண்ற?… என்கிட்டயே டிராமாவா?… மெசேஜை பார்த்து ஃபாலோ பண்ணிய மனைவி… ஹோட்டலில் கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… ம.பி – யில் அரங்கேறிய சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 5, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள ஷார்தா சௌக் பகுதியில், கணவர் ஒரு ஹோட்டலில் மற்றொரு பெண்ணுடன் இருந்தபோது மனைவி அவரைக் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாகவே சந்தேகம் கொண்டு வந்த மனைவி, அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கணவரின் தொலைபேசியில் வந்த சந்தேகத்திற்குரிய குறுஞ்செய்திகளை ததேச்சையாகப் பார்த்த மனைவிக்கும், அவரது நடத்தை மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதன் காரணமாக, கணவர் வீட்டை விட்டு வெளியேறியபோது அவரைப் பின்தொடர்ந்து செல்ல மனைவி முடிவு செய்தார். அவர் சென்ற வழியைக் கண்காணித்தபடி சென்றபோது, ஜபல்பூரில் உள்ள பிரபல பேலன்சிங் ராக் பகுதிக்கு அருகே அமைந்திருந்த ஒரு ஹோட்டலுக்கு கணவர் செல்வது தெரியவந்தது.

   

https://twitter.com/muchatlu_/status/2106736819123659099/video/1

   

அந்த ஹோட்டலுக்குள் சென்ற மனைவி, அங்குள்ள ஒரு அறையில் தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் ஒன்றாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக இருவரையும் நேருக்கு நேர் மடக்கிப் பிடித்த மனைவி, கணவரின் இந்தத் துரோகத்தைக் கண்டித்து ஹோட்டலிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.