“இனி நாம சந்தோசமா வாழலாம்” நம்பி வந்த காதல் மனைவி… யார்கிட்ட பேசுற..? மீண்டும் வந்த சண்டை… கழுத்தை அறுத்த கணவன்…!!

By Soundarya on ஆவணி 20, 2025

Spread the love

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள வீரமார்த்தாண்டன் புதூரில் வசிப்பவர் சுரேஷ்( 41). இவர் நாகர்கோவிலில் உள்ள இருசக்கர வாகனம் ஷோரூம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி அனுஷா ஜாஸ்மின்(33) இவர் பல் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே  சந்தேகம் இருந்து வந்துள்ளதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து அனுஷா தன்னுடைய கணவரை பிரிந்து இரண்டு குழந்தைகளோடு வாடகை வீட்டிற்கு ஒன்றில் தனியாக வசித்து வந்துள்ளார் .  இதற்கிடையில் ஒரு வாரத்துக்கு முன்பாக சுரேஷ் மனைவியிடம் சமாதானம் பேசி இனி தகராறு செய்ய மாட்டேன் ஒற்றுமையாக வாழலாம் என்று கூறியுள்ளார்.

இதனை நம்பி அனுஷா மீண்டும் தன்னுடைய கணவரோடு திரும்பி வாழ வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சுரேஷ் மனைவியை ஃபோனில் தொடர்பு கொண்டபோது அனுஷாவின் செல்போன் பிஸியாக இருந்துள்ளது. உடனே வீட்டுக்கு வந்த சுரேஷ் மனைவியிடம் யாரிடம் பேசினாய்? என்று கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு  முற்றியதால் வெளியே செல்வதாக கூறிவிட்டு திடீரென்று சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து அனுஷாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அனுஷாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து கணவர் சுரேஷை கைது செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.