தினமும் தவறாமல் காபி குடிப்பவர்களா நீங்கள்?… அப்போ அதனால் வரும் பாதிப்புகள் குறித்து தெரிஞ்சுக்கோங்க…!

By Divyamayakannan on ஆவணி 20, 2025

Spread the love

உலகளவில் மக்களால் விரும்பி குடிக்க கூடிய பானங்களில் காபியும் ஒன்று. பெரும்பாலும் மக்கள் அதிகமாக தேநீர் மற்றும் காபிகளுக்கு அடிமையாகி உள்ளனர். காப்பியின் நன்மைகள் தீமைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். சிலருக்கு பதட்டம், தூக்கமின்மை, அமில ஃரிபிளக்ஸ் அல்லது இதயத்துடிப்பு போன்ற பக்க விளைவுகளை தூண்டும்.

தூக்கமின்மை: தூக்கமின்மை உள்ளவர்கள் காப்பியை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் காபியில் உள்ள காஃபின் தூக்கத்தை வர விடாது.

   

பதற்றம் மற்றும் நடுக்கம்: காஃபி நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும்.

   

செரிமான பிரச்சனை: காபிலுள்ள அமிலத்தன்மை வயிற்றில் எரிச்சலை உண்டாக்கி, அமில ஃரிபிளக்ஸ், நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

 

இதயத்துடிப்பில் மாற்றம், இரத்த சோகை: இதய நோய் உள்ளவர்கள் காப்பியை குடிப்பது நல்லதல்ல. காஃபிக்கு அடிமை: தலைவலி சோர்வு மற்றும் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.