“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

By Devi Ramu on புரட்டாதி 23, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது வீட்டிற்கு வந்தபோது, அவரது மனைவி பபிதா சிங் இரண்டு பூசாரிகளுடன் மதச் சடங்கில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அரவிந்த் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்து மனைவி பபிதாவையும், பூசாரிகள் மகேந்திர பதக் மற்றும் அகிலேஷ் மிஸ்ரா ஆகியோரையும் அடுத்தடுத்து சுட்டுக் கொடூரமாகக் கொன்றார். மூவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

இதையடுத்து, அரவிந்த் தனது மூன்று குழந்தைகளையும் வீட்டிற்குள் உள்ள ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று தன்னைத் தானே பூட்டிக்கொண்டான். தகவலறிந்து விரைந்து வந்த போலிஸார் வீட்டைச் சுற்றி வளைத்து 7 மணி நேரமாகப் பேச்சுவார்த்தை நடத்தியும் அரவிந்த் வெளியே வர மறுத்து துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளான். மூத்த மகளைக் கேடயமாகப் பயன்படுத்தி அவன் நடத்திய தாக்குதலில் அவரது மகன் மீதே துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.

   

பொறுமையிழந்த சிறப்புப் படை போலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிக் கதவை உடைத்து உள்ளே அதிரடியாகப் பாய்ந்தனர். போலிஸார் நடத்திய பதில் தாக்குதலில் காயமடைந்த அரவிந்தும், குண்டு பாய்ந்த அவனது மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ச்சியடைந்த மற்ற இரு பெண் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், உத்தரப் பிரதேசத்தையே இந்த சம்பவம் உலுக்கியுள்ளது.