மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மதுப் பழக்கத்திற்கு அடிமையான நபர் ஒருவருடன் வாழப் பிடிக்காமல் அவரது மனைவி தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தக் கணவன், நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மனைவியின் பெற்றோர் வீட்டிற்குப் படையெடுத்துள்ளார். வீட்டின் மொட்டை மாடியில் ஏறி நின்றுகொண்டு மாமனார் குடும்பத்தினரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அங்குப் பீதியை உருவாக்கத் தனது மாமனார் மற்றும் மனைவியின் சித்தப்பாவை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்தத் துப்பாக்கிச் சூட்டில் அவர்கள் இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
Enter a X URL
சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த காவல்துறையினர், சுமார் மூன்று மணி நேரமாக அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சாமர்த்தியமாகச் செயல்பட்ட போலீசார், அவரது நம்பிக்கையைப் பெற்று அவரைச் சமாதானப்படுத்தி, கையில் இருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர். மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் துப்பாக்கிச் சூடு வரை சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
