சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைக் கண்டுவந்த தங்கத்தின் விலை, வாரத்தின் தொடக்க நாளான இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் சவரன் ரூ.1,05,760-க்கு விற்பனையான நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ,30 உயர்ந்து ரூ.13,250-ஆகவும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,000-ஆகவும் அதிகரித்து நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், தங்கத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. சென்னையில் வெள்ளி விலையானது தொடர்ந்து 6-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் வர்த்தகமாகி வருகிறது. தங்கத்தின் விலை மீண்டும் லட்சத்தைத் தாண்டி உயர்ந்து வருவது சாமானிய மக்களுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது.
