லக்னோ ராம்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருத்தரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. அடிக்கடி இருவரும் போனில் பேசி உள்ளனர். பின்பு கணவன் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு கள்ளத்காதலன் வந்து உல்லாசம் அனுபவித்துள்ளான். கணவனுக்கு இந்த விஷயம் தெரியவர அதிர்ச்சி அடைந்து மனைவியை கண்டித்துள்ளார், அதனால் கள்ளக்காதனுடன் ஓட்டம் பிடித்துள்ளார் ஓராண்டில் 10 முறை ஓடியுள்ளார்.
பெண்ணின் வீட்டார் தேடி கண்டுபிடித்து கேட்டபோது , இப்போது எனக்கு கணவரைப் பிடிக்கவில்லை எனது கள்ளக்காதலணை தான் பிடித்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் வீட்டார் கிராம பஞ்சாயத்தில் கூறினர். இந்த இளம் பெண்ணோ யாருக்கும் பயப்படாமல் எனக்கு என் கள்ளகாதலனை தான் பிடித்து இருக்கிறது என்று ஊர் முன்னால் கூறியுள்ளார்.
இளம்பெண் மாதத்தில் கணவருடன் பாதி நாளும் மீதினால் காதலனுடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட ஊர் மக்கள் வாயடைத்து உறைந்து போய் நின்றனர். ஒரு கட்டத்தில் கணவன் மனைவியிடம் கெஞ்சி கதறி அழுது உள்ளார். இருப்பினும் மனைவி இறங்கி வரவில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு எதுவும் மாறப் போவதில்லை என்று தெரிந்து கொண்ட கணவன் மனைவியை கள்ளக்காதலனுடனே அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் பரபரப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
