“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 27, 2026

Spread the love

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கொடூரக் கணவன் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரைச் சேர்ந்த ஹுமைரா தமன்னா என்ற 18 வயது பெண் பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஜாரில் வசித்து வந்தபோது, முகமது பயாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அப்பெண்ணை அவரது குடும்பத்திற்குத் தெரியாமல் கடந்த மே மாதம் ஹைதராபாத்திற்கு அழைத்து வந்த பயாஸ், அவரைத் திருமணமும் செய்துகொண்டு வாடகை வீட்டில் தங்க வைத்துள்ளார்.

   

இந்நிலையில், மனைவியை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துவிட்டுத் தனது 3 நண்பர்களை அனுப்பி அவர் மீது பாலியல் வன்கொடுமை செய்ய வைத்துள்ளார். நிலுவையில் இருந்த வாடகையை வசூலிக்க வீட்டின் உரிமையாளர் அக்டோபர் 23 அன்று பூட்டை உடைத்து உள்ளே சென்றபோதுதான் இந்த அநியாயம் வெளிச்சத்திற்கு வந்தது. உடனே மீட்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் பேரில், பயாஸ் மற்றும் அவனது 3 நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.