“ஐயோ… பொருளை எடுத்துக்கோங்க… மனைவியை விடுங்க… திருடர்களிடம் கதறிய கணவன்… அழகில் மயங்கி வெறும் கையோடு ஓடிய 4 பேர்…!!

By Swetha on ஆவணி 3, 2026

Spread the love

உத்தரப் பிரதேசத்தின் பரேலி பகுதியில் மிகவும் விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 28 வயதான நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கில் 4 திருடர்கள் நள்ளிரவில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

ஆனால், வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கே இருந்த பெண்ணின் அழகில் மயங்கி, தாங்கள் வந்த நோக்கமாகிய கொள்ளையை அப்படியே கைவிட்டனர். பொருள்களைத் தேடுவதற்குப் பதிலாக, கணவனின் கண் முன்னாடியே அந்தப் பெண்ணிற்குத் தொல்லை கொடுத்து, அவரை மீண்டும் மீண்டும் முத்தமிடத் தொடங்கினர்.

   

இதனால் செய்வதறியாது திகைத்த அந்தப் பெண்ணின் கணவர், “என் மனைவியை முத்தமிடாதீர்கள், உங்களுக்கு என்ன பொருட்கள் வேண்டுமோ அதை மட்டும் திருடிக்கொண்டு போங்கள்!” என்று அவர்களிடம் கத்தியுள்ளார். கணவனின் இந்த விசித்திரமான பேச்சைக் கேட்ட திருடர்கள், வீட்டில் இருந்த எந்தப் பொருளையும் திருடாமல் அப்படியே வெறுங்கையோடு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.