கோவையில் சமூக வலைத்தள மோகத்தாலும், குடும்பத் தகராறினாலும் இளம் பெண் ஒருவர் அவரது கணவராலேயே காட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மதுக்கரையை அடுத்த மஞ்சப்பள்ளம் காட்டுப் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருவரின் சடலம் நிர்வாண நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய போலீசாருக்கு, சடலமாகக் கிடந்தது ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷா (25) என்பதும், அவரைப் படுகொலை செய்தது அவருடைய கணவரான ஜெகன் பிரதான் (25) என்பதும் தெரியவந்தது.
கட்டிடத் தொழிலாளியான ஜெகன் பிரதானும் வர்ஷாவும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் (Instagram) மூலமாக அறிமுகமாகி, காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்குப் பிறகு கோவைபுதூர் அருகே அறிவொளி நகரில் தங்களது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட வர்ஷா, தொடர்ந்து பல வீடியோக்களைப் பதிவேற்றி வந்துள்ளார். இதன் மூலம் அவருக்குப் பல ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டு, கணவர் இல்லாத நேரங்களில் அவர்களுடன் அடிக்கடி பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஜெகன் பிரதானுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து, தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கடுமையான குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
சம்பவத்தன்று மதுக்கரை புறவழிச்சாலை அருகேயுள்ள மஞ்சப்பள்ளம் பகுதிக்கு இருவரும் சென்றுள்ளனர். அப்போது வர்ஷா இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்கிருந்த காட்டுப் பகுதிக்குள் சென்றபோது, ஜெகன் பிரதான் அவரைத் தாம்பத்திய உறவுக்கு அழைத்துள்ளார். ஆனால், அதற்கு வர்ஷா கடுமையான மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ஜெகன் பிரதான், வர்ஷாவைத் சரமாரியாகத் தாக்கியுள்ளார். கணவனின் பிடியில் இருந்து தப்பித்து ஓட முயன்ற வர்ஷாவை ஜெகன் பலவந்தமாகப் பிடித்து இழுத்ததில் அவருடைய ஆடைகள் அவிழ்ந்து விழுந்துள்ளன.
இதனைத் தொடர்ந்தும் ஆத்திரம் அடங்காத ஜெகன் பிரதான், வர்ஷாவின் கழுத்தை இறுக்கமாக நெரித்துக் கொலை செய்துள்ளார். வர்ஷா சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்ததை அடுத்து, அவரது உடலை அங்கேயே வீசிவிட்டு ஜெகன் இரயிலேறி ஆந்திர மாநிலத்திற்குத் தப்பி ஓடிப் பதுங்கியுள்ளார். இதற்கிடையில் உடலை மீட்ட போலீசார், தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். இறுதியாக ஆந்திராவில் பதுங்கியிருந்த கொலையாளி ஜெகன் பிரதானை போலீசார் அதிரடியாகச் சுற்றி வளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். காதலித்துக் கைப்பிடித்த மனைவியையே கணவன் ஆத்திரத்தில் கொடூரமாகக் கொன்ற சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூரை அடுத்த ஆதியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-வது நாள் சாதனை…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.…
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் 57 வயதான சுனில். கட்டிடத் தொழிலாளியான இவர், தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகிலுள்ள சோட்டையன்தோப்பு…
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்துள்ள கவசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் 34 வயதான சரத்குமார். இவர் ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ஒரு…
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 30 வயதான பச்சைமுத்து. இவர் பிரபல டேட்டிங் செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில்,…
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சி கீழக்காடு பகுதியைச் சேர்ந்தவர் 51 வயதான சண்முகநாதன். இவரது மனைவி…