“காதலியை வைத்து இன்ஸ்டாகிராமில் ஸ்கெட்ச்…” முன்னாள் காதலனை தீர்த்து கட்ட கணவர் போட்ட பிளான்… நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்…. பகீர் பின்னணி..!!

By Devi Ramu on புரட்டாதி 15, 2026

Spread the love

மதுரை மாவட்டம் சிலைமான் அருகே உள்ள தந்தை பெரியார் நகர் பகுதியில், கொடைக்கானலைச் சேர்ந்த தேவேந்திரன் (26) என்ற இளைஞர் நள்ளிரவில் அரிவாளால் காதலன் கொலைகொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்தபோது தேவேந்திரனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் இருந்துள்ளது. ஆனால், இரு வீட்டாரின் எதிர்ப்பால் அந்தப் பெண் வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இருப்பினும் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பெண் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கணவன் ராஜபாண்டி, தனது மனைவியின் முன்னாள் காதலனான தேவேந்திரனைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டினார்.

   

இதற்காக, ராஜபாண்டி தனது முன்னாள் காதலியான முத்துமாரி என்பவரைப் பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் மூலம் தேவேந்திரனிடம் பேச வைத்து அவரை மதுரைக்கு நேரில் வரவழைத்துள்ளார். தேவேந்திரன் தனது நண்பருடன் அங்கு வந்தபோது, மறைந்திருந்த ராஜபாண்டி மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

   

தாக்குதலின் போது ராஜேஷின் கண்ணில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது போலிஸாரிடம் சிக்கினர். இதைத்தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த கணவனின் முன்னாள் காதலி முத்துமாரி உள்பட 3 பேரையும் சிலைமான் போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.