13 வருடக் காதல்.. 40 நாள் வாழ்க்கை..! 2-வது கல்யாணத்திற்காக மனைவியைக் கொன்று மூட்டையில் கட்டிய கணவன்… பீகாரை உலுக்கிய கொலை..!!

By Soundarya on சித்திரை 26, 2026

Spread the love

பீகாரைச் சேர்ந்த தீபக் என்ற பொறியாளரும், ஆராத்யா என்ற ஆசிரியைும் கடந்த 13 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த மார்ச் 13-ம் தேதி ஒரு கோயிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், தீபக்கின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். சமூக அந்தஸ்து மற்றும் பெற்றோரின் கட்டாயத்திற்காக தீபக் இரண்டாவது திருமணத்திற்குச் சம்மதித்தார். இந்தத் தகவல் ஆராத்யாவுக்குத் தெரியவரவே, அவர் தனது கணவனைத் தட்டிக்கேட்டுப் போராடியுள்ளார்.

தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு ஆராத்யா இடையூறாக இருப்பார் என்று கருதிய தீபக், அவரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டார். ஏப்ரல் 12-ம் தேதி இரவு, ஆராத்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது தீபக் அவரைத் தலையணையால் அமுக்கிக் கொலை செய்தார். பின்னர், ரகசியமாக உடலை ஒரு மூட்டையில் கட்டி, பைக்கில் கொண்டு சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமான ஆற்றுப் பகுதியில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்குத் திரும்பினார். ஆராத்யாவைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீபக்கைக் கைது செய்து விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

   

தன்னுடைய இரண்டாவது திருமணத்திற்காக, 13 ஆண்டுகால காதலையும், மனைவியையும் பலி கொடுத்த தீபக்கின் செயல் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 21-ம் தேதி தீபக்கிற்கு இரண்டாவது திருமணம் நடக்கவிருந்த நிலையில், தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 13 வருடக் காதல் வெறும் 40 நாட்களில் கொலையில் முடிந்தது அப்பகுதி மக்களைக் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.