தற்செயலா? திட்டமிட்டதா?… “இன்று இரவு ரத்தம் தெறிக்கும்!”… வெள்ளை மாளிகை பெண் அதிகாரி சொன்ன வார்த்தை அப்படியே பலித்தது எப்படி?

By Muthu Mani on சித்திரை 26, 2026

Spread the love

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள பிரபல ஹில்டன் ஹோட்டலில், வெள்ளை மாளிகை நிருபர்களுக்கான இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா மற்றும் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். விழா உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், எதிர்பாராத விதமாகத் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

துப்பாக்கிச் சத்தம் கேட்ட உடனேயே பாதுகாப்பு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியாவை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர். இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாக வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

   

அந்த வீடியோவில் பேசிய கரோலின் லீவிட், அதிபர் டிரம்ப் சண்டைக்குத் தயாராக இருப்பதாகவும், அவரது உரை மிகவும் வேடிக்கையாகவும் பொழுதுபோக்காகவும் அமையும் என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக, “இன்று இரவு சில துப்பாக்கிச் சூடுகள் (Shots fired) இருக்கும்; அதைத் தவறவிடாமல் பாருங்கள்” என்று அவர் கூறிய வார்த்தைகள், துப்பாக்கிச் சூடு சம்பவம் நிஜமாகவே நடந்த பிறகு பலருக்கும் பெரும் ஆச்சரியத்தையும் திகைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

   

உண்மையில், அதிபர் டிரம்ப் தனது உரையில் மற்றவர்களைக் காரசாரமாக விமர்சிப்பார் என்பதைக் குறிக்கவே ‘Shots fired’ என்ற சொற்பிரயோகத்தை லீவிட் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இருப்பினும், அவர் சொன்னது போலவே தற்செயலாகத் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் இந்த வீடியோக்கள் தற்போது உலகளவில் வைரலாகி வருகின்றன.