“மனைவியை கொன்று விட்டேன்”…. 15 பக்க கடிதம்… வாட்ஸ்-அப் வீடியோ… திருப்பூரில் கணவன் செய்த கொடூரம்….!

Spread the love

திருப்பூரில் சொத்து தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுமலைப்பேட்டையில் விவசாயம் செய்து வந்த செந்தில்குமார் – சத்யா தம்பதியிடையே, அண்மையில் பிரிக்கப்பட்ட குடும்ப சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக மோதல் நிலவி வந்துள்ளது. சத்யாவின் சகோதரிக்கு வழங்கப்பட்டதை விட, சத்யாவுக்கு குறைவான சொத்தே கிடைத்ததாகக் கூறி செந்தில்குமார் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது.

சம்பவம் நடந்த செவ்வாய்க்கிழமை அன்று, தனது 15 வயது மகளைத் தாயார் வீட்டுக்கு அனுப்பி வைத்த செந்தில்குமார், மீண்டும் மனைவியுடன் சொத்து விவகாரம் குறித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற அவர், வீட்டில் இருந்த அரிவாளால் சத்யாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், செந்தில்குமார் தானும் விஷம் குடித்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்னதாக, செந்தில்குமார் தனது நெருங்கிய உறவினர்கள் அடங்கிய வாட்ஸ்-ஆப் குழுவில் உருக்கமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், 15 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த வீரபாண்டி போலீசார் கதவை உடைத்து இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது அந்த 15 பக்க கடிதத்தையும், வாட்ஸ்-ஆப் வீடியோவையும் கைப்பற்றியுள்ள போலீசார், இந்த கொடூர முடிவுக்குச் சொத்து தகராறு மட்டுமே காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா எனத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நிமிடம் யோசிக்காமல் எடுத்த இந்த ஆத்திர முடிவு, 15 வயது சிறுமியைத் தாய், தந்தை இருவரையும் இழக்கச் செய்து நிர்கதியாக நிற்க வைத்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

குட் நியூஸ்..! இனி ‘ஆதார்’ இல்லாமல் இது நடக்காது… மேட்ரிமோனி இணையதளங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு… வெளியிட்ட தமிழக அரசு…!!

ஆன்லைன் திருமண தகவல் மையங்கள் வழியாக நடைபெறும் மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு புதிய…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ என்னடா இது… விருந்தாளிக்கு குடுத்திருந்தா என் மானமே போயிருக்கும்… பிளிப்கார்ட் அனுப்பிய சிலந்தி வலை குலாப் ஜாமுன்… நிச்சயதார்த்த நாளில் மனமுடைந்த இளைஞர்…!

பிளிப்கார்ட் போன்ற முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தில் வாங்கிய உணவுப் பொருட்கள் இதுபோன்று சுகாதாரமற்ற முறையில் விநியோகிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நிச்சயதார்த்தம்…

3 மணத்தியாலங்கள் ago

“யாராக இருந்தாலும் விடமாட்டோம்”!… வன்முறைக்கு பின் பீகார் அரசின் அதிரடி எச்சரிக்கை… மேடையில் அமைச்சர் விடுத்த பகீர் வார்னிங்…!!

பீகார் மாநிலத்தின் ஜமுய் மற்றும் சமஸ்திபூர் மாவட்டங்களில் சமீபத்தில் அரங்கேறிய வன்முறைத் தாக்குதல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சம்பவங்கள்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… இரவில் பசிக்கு ஆர்டர் செய்த பனீர் பிரியாணி… உணவை தட்டில் கொட்டியதும் கதறிய பெண்… ஸொமேட்டோ உணவகத்தின் பேரதிர்ச்சி சம்பவம்…!

ஒரு இந்து பிராமணப் பெண்ணான அவள், அன்றைய இரவு கடுமையான பசியின் காரணத்தால் ஸொமேட்டோ செயலியைத் திறந்து உணவருந்த முடிவு…

3 மணத்தியாலங்கள் ago

ஏன் இப்படி ஒரு முடிவு..! முதல் மாடியிலிருந்து கீழே குதித்த பெண்… நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்… டேராடூனில் நடுநடுங்க வைக்கும் சம்பவம்…!!

டேராடூன் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்ற வளாகத்தில் பெரும் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. நியூ கேன்ட் சாலை, விஜய் காலனியைச்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ யாராவது காப்பாத்துங்க… மாணவிக்கு நடுரோட்டில் அரங்கேறிய கொடூரம்… டெல்லியை உலுக்கிய பகீர் சம்பவம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

வடமேற்கு டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் காரில் பயணித்த ஒரு கும்பலால், டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட…

3 மணத்தியாலங்கள் ago