மனைவி முகத்தில் மிளகு ஸ்ப்ரே அடித்து கழுத்தை நெறித்து துண்டு துண்டாக வெட்டிய கணவன்… 50 அடி பள்ளத்தில் உடலை வீசிய கொடூரம்… விசாரணையில் திடுக்கிடும் உண்மை..!

Spread the love

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் அருகே உள்ள காணக்காரி என்ற பகுதியை சேர்ந்த ஷாம் ஜார்ஜ் (59) என்பவருக்கு ஜெசி சாம் (49) என்ற மனைவியும் 28 வயதில் ஒரு மகளும், 25 மற்றும் 23 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே வெளிநாட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆன சாம் ஜார்ஜ் கோட்டையம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் பயணம் மற்றும் சுற்றுலா படிப்பு படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இது தொடர்பாக கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 15 வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.

இதனிடையே சாம் ஜார்ஜிக்கு கோட்டயத்தில் 4.5 ஏக்கர் நிலமும், கோவா மற்றும் கோவளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதனால் கணவன் மனைவியிடையே சொத்து தகராறும் இருந்ததால் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் உள்ள மகள் தாயை பலமுறை போனில் அழைத்தும் அவர் பதிலளிக்காததால் உடனே போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் உடனே ஷாம் ஜார்ஜ் வீட்டுக்கு விரைந்து சென்ற போது வீட்டில் கணவன் மனைவி இருவரும் இல்லாததால் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே நேற்று இடுக்கி மாவட்டம் உடும்பனூர் அருகே உள்ள செப்புக்குளம் பகுதியில் 50 அடி பள்ளத்தில் பெண்ணின் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் அறிந்து விரைந்த போலீசார் உடலை கைப்பற்றிய போது அது ஜெசி என தெரிய வந்தது. அத்துடன் சாம் ஜார்ஜ் தலைமறைவாக இருப்பது தெரியவர அவரை போலீசார் தீவிரமாக தேடி கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மனைவியை கொலை செய்து உடலை பள்ளத்தாக்கில் வீசிய உண்மையை ஒப்புக்கொண்டார். கணவன் மனைவி இருவருக்கும் வீட்டில் தகராறு ஏற்பட்டபோது ஜெஸ்ஸியின் முகத்தில் சாம் ஜார்ஜ் மிளகு ஸ்பிரே அடித்துள்ளார்.

இதில் மயக்கம் அடைந்த அவரை படுக்கையறைக்கு கொண்டு சென்று துண்டால் கழுத்தை நெறித்து மூச்சுத் திணற வைத்து கொலை செய்துள்ளார். அத்துடன் அன்று இரவே அவரது உடலை காரில் போட்டு பள்ளத்தாக்கில் வீசிவிட்டு மைசூருக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. ஜார்ஜ் உடன் கோட்டையும் பல்கலைக்கழகத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த ஒரு இளம் பெண்ணும் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகி வந்த நிலையில் இவருக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அவரையும் கைது செய்த விசாரித்து வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

4 minutes ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

6 minutes ago

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

31 minutes ago

“அன்னைக்கே நான் சொன்னேன்.. இபிஎஸ் தான் கேட்கல”… இன்னைக்கு தோத்ததுக்கு காரணமே அதுதான்… பகீர் கிளப்பிய கே.சி பழனிசாமி…!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…

32 minutes ago

Breaking: திடீர் திருப்பம்… விஜய்க்கு ஆதரவு… சற்றுமுன் திருமாவளவன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. .!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இறுதி முடிவு…

43 minutes ago