“அன்னைக்கே நான் சொன்னேன்.. இபிஎஸ் தான் கேட்கல”… இன்னைக்கு தோத்ததுக்கு காரணமே அதுதான்… பகீர் கிளப்பிய கே.சி பழனிசாமி…!

Spread the love

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகே அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகவும், அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுத்ததே இன்று கட்சி பலவீனமடைய முதன்மைக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பல முக்கிய நிர்வாகிகள் இன்று திமுக மற்றும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆகிய கட்சிகளில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்கு முன்பு கட்சியினரின் ஆதரவைப் புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தவெக மற்றும் திமுகவிடம் ஆதரவு கோரி மன்றாடுவது கட்சியின் பரிதாப நிலையை வெளிப்படுத்துவதாக கே.சி.பழனிசாமி விமர்சித்துள்ளார். ‘கூவத்தூர் பழனிசாமி’யாக இருந்தவர் தற்போது ‘பாண்டிச்சேரி பழனிசாமி’யாக மாறி மீண்டும் ரிசார்ட் கலாச்சாரத்திற்குச் சென்றிருப்பதாக அவர் எள்ளி நகையாடியுள்ளார்.

அதிமுகவின் பலம் வெகுவாகக் குறைந்து, ஒரு சிறிய அறையில் கூட்டத்தை நடத்தும் அளவுக்குச் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சுருங்கிவிட்டதாகக் கூறியுள்ள அவர், இனியாவது எடப்பாடி பழனிசாமி தனது தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு அவர் மாறத்தவறினால், அதிமுக தொண்டர்களே முன்வந்து இத்தகைய தலைமையைத் திருத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும், இல்லையெனில் கட்சி எதிர்காலத்தில் இன்னும் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

Swetha

Recent Posts

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

51 seconds ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

35 minutes ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

40 minutes ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

42 minutes ago

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

1 மணத்தியாலம் ago