அட பாவி… மதுபோதையில் அரிவாள் வெட்டு… மனைவியைக் கொன்று நாடகமாடிய கணவன்… உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி…!!

By Swetha on ஆடி 27, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், ஹனீப் என்பவர் மது அருந்திவிட்டு தன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்றும் ஏற்பட்ட மோதலில் ஆத்திரமடைந்த ஹனீப், வீட்டில் இருந்த கூர்மையான அரிவாளை எடுத்து மனைவியின் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளார். பின்னர், தன் மீது சந்தேகம் வராதவாறு காவல்துறையினரிடம் நாடகமாடியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்த காயங்களின் தன்மையைப் பார்த்துச் சந்தேகமடைந்தனர். இது சாதாரண சம்பவமல்ல, திட்டமிட்ட கொலை என்பதை உணர்ந்த காவல்துறையினர், வழக்கை வேறு கோணத்தில் திருப்பி தீவிர விசாரணை மேற்கண்டனர்.

   

விசாரணையின் போது, இத்தம்பதியினரின் 5 வயது மகனான பைசான் அளித்த நேரடி வாக்குமூலம் வழக்கின் போக்கையே முற்றிலும் மாற்றியது. “அப்பா குடித்துவிட்டு வந்து அம்மாவை அரிவாளால் வெட்டினார்” என்று அச்சிறுவன் உண்மையைக் கூறியதன் அடிப்படையில், மனைவியைக் கொன்று நாடகமாடிய ஹனீப்பை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.