“மனைவியை கொன்று 3 நாட்கள் பிணத்துடன் குடும்பம் நடத்திய கணவன்…” பெட்டில் சுருட்டி போட்டு காலி மனையில் வீசிய கொடூரம்… பெங்களூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 28, 2026

Spread the love

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சாகர் சந்திர ராவத் (32) மற்றும் அனசுயா பெஹரா (28) ஆகியோர் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு, சில மாதங்களுக்கு முன்புதான் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தனர். சாகர் அங்குள்ள ஹோட்டல் ஒன்றிலும், அனசுயா துணிக்கடை ஒன்றிலும் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு இடையே குடும்பச் செலவு மற்றும் பணப் பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 11 அன்று இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த சாகர், மனைவியைக் கடுமையாகத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கொலை செய்த பிறகு, மனைவியின் சடலத்தை வீட்டிலேயே 3 நாட்கள் வைத்துள்ளார். பின்னர் உடலை ஒரு விரிப்பில் சுருட்டி, கட்டிலில் வைத்துச் எடுத்துச் சென்று சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள ஒரு காலி மனையில் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளார்.

   

சில நாட்களில் சடலம் அழுகி, அப்பகுதியில் இருந்த நாய்கள் உடலின் சில பகுதிகளைக் கடித்துச் சிதைத்ததால், இறந்தது யார் என்பதை அடையாளம் காண்பது போலிஸாருக்குப் பெரும் சவாலாக மாறியது. இருப்பினும், சடலத்தில் இருந்த துணியின் டேக்கை வைத்து விசாரணையைத் தொடங்கிய போலிஸார், அது ஒரு வணிக வளாகத்தில் வாங்கப்பட்டது என்பதைக் கண்டறிந்து, இறந்தது அனசுயா என்பதை உறுதிப்படுத்தினர்.

   

இதனைத் தொடர்ந்து, சாகர் பணிபுரிந்த ஹோட்டலில் போலிஸார் விசாரணை நடத்தியபோது, தம்பதியினருக்கு இடையே இருந்த தகராறு வெளிச்சத்திற்கு வந்தது. உடனடியாகச் சாகரைப் பிடித்துச் சம்பிகேஹள்ளி போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், அவர் தனது மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரைப் போலிஸார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.