காதல் திருமணங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடிய குடும்பத்த தகராறுகள் சில நேரங்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. உத்திரபிரதேச மாநிலத்தில் அப்படி ஒரு சம்பவம் தான் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கன்ச் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த அனில் என்பவர் கடந்த நவம்பர் மாதம் தன்னுடைய தாய் மாமா மகளான அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு அனில் தன்னுடைய மனைவி அனிதா மற்றும் தம்பி சச்சின் உடன் ஹரிதுவா கிராமம் அருகே உள்ள ஓம் நகரம் என்ற இடத்திற்கு குடிபெயர்ந்துள்ளார். அனில் டிராக்டர் ஓட்டுனராக வேலை செய்து வருகின்றார்.
இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காலை அவரும் அவருடைய தம்பியும் வேலைக்குச் சென்றுள்ளனர். மாலை வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டிருந்தது. உடனே பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அருகே தரையில் அனிதா உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். அந்த அறை முழுவதும் பொருள்கள் சிதறி கிடந்ததுடன் அருகில் ரத்தக்கரை படிந்த அரிவாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிறகு வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியதில் அனிதாவின் சகோதரர் சந்திரபால், அனில், சச்சின் மற்றும் மற்றொரு உறவினர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை குற்றச்சாட்டு புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அனிதாவின் கணவர் முக்கிய சந்தேக நபர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் அதற்கு அனிதா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட மன கசப்புதான் இந்த கொலைக்கு காரணம் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…