காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் ஐந்து மாத கர்ப்பிணிப்பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழையசீவரத்தைச் சேர்ந்த ஊர்க்காவல் படை வீரரான சோமசுந்தரம் (28) என்பவரும், சோனியாவும் (28) காதலித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், சோனியா தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத் தகராறு காரணமாக சோமசுந்தரம் தனது மனைவி சோனியாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சோனியாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, தப்பி ஓடிய கணவன் சோமசுந்தரத்தைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
