வேலூர் மாவட்டம் பள்ளி கொண்ட அடுத்த காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருடைய மகன் கருணாகரன் (43). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கருங்காலி குப்பம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகளான கலையரசி என்ற பெண்ணுக்கும் 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் டயர் கடை வைத்து நடத்தி வருகின்றார்.
கடந்த சில மாதங்களாக தொழில் கஷ்டம் ஏற்பட்டதால் கருணாகரன் வருமானம் இல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. எனவே மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் கருணாகரன் மனைவியிடம் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி தன்னிடம் அன்பாக நடந்து கொள்ளவில்லை என்று நினைத்த கருணாகரன் மனைவி மீது சந்தேகப்பட தொடங்கியுள்ளார்.
அதன் பிறகு கலையரசி இடம் என்னை விட்டு வேற யார் கூடையாவது வாழ்ந்துட்டு இருக்கியா என்று கேட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மன உளைச்சல் அடைந்த கருணாகரன் கலையரசியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த கலையரசியின் கை மற்றும் கால்களில் இரும்பு கம்பியால் மின்சாரம் பாய்ந்து கொலை செய்துவிட்டு அதன் பிறகு காலை எதுவும் தெரியாதது போல மாமனார் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து மனைவி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
மகளின் இறப்பில் பெற்றோர் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கருணாகரன் கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…