“உன் அம்மாவிடம் பேசக்கூடாது…” கண்டிஷன் போட்ட காதல் கணவர்….! இரவில் இளம்பெண்ணை துடிதுடிக்க கொன்று… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 21, 2025

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் ஆலடிபட்டியைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவருக்கு 24 வயது ஆகிறது. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பிரித்திகா என்ற இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் பெண் வீட்டாருக்கு அன்புராஜன் குடும்பத்தினரை பிடிக்கவில்லை. ஆனாலும் பிள்ளைகளின் விருப்பத்திற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

திருமணமான சில நாட்களிலேயே கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் திருமணம் ஆன 2 மாதத்திலேயே இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். அவர்களை உறவினர்கள் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்தனர். அதன் பிறகும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது பிரித்திகா தனது தாயிடம் செல்போனில் அடிக்கடி கணவர் பற்றி கூறியுள்ளார்.

   

இதை அறிந்த அன்புராஜ் நியூ உனது குடும்பத்தில் பேசுவதால்தான் நிறைய பிரச்சனை வருகிறது. அதனால் அவர்களுடன் பேசக்கூடாது என கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்று அன்புராஜ் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது பிரித்திகா அவரது அம்மாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பார்த்து கோபமடைந்த அன்புராஜ் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

   

ஒரு கட்டத்தில் கோபத்தில் பிரித்திகாவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்துள்ளார். பின்னர் கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துவிட்டு நெல்லை சந்திப்பு காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று பிரித்திகாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.