“செத்த பிணம் போல கிடக்கிறாள்… வந்து உடலுறவு கொள்…” மனைவி இறந்த பிறகும் பக்கத்து வீட்டுகாரருக்கு மெசேஜ்… தாயை பார்த்து துடித்த மகள்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 12, 2026

Spread the love

ஆஸ்திரியா நாட்டின் மார்ச்ட்ரெங்க் நகரைச் சேர்ந்த 51 வயதான ராபர்ட் ஐச்சிங்கர் என்ற நபர், பணத் தேவைகளுக்காகத் தனது 39 வயது மனைவி டேனியலா ஐச்சிங்கருக்குத் தெரியாமல் அவருக்குப் போதை மற்றும் மயக்க மருந்துகளைக் கொடுத்து வந்துள்ளார். மனைவி சுயநினைவின்றி இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி, பல ஆண்களை வீட்டிற்கு வரவழைத்து மனைவியைப் பாலியல் வன்கொடுமை செய்ய அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூன் 25 அன்று கொடூரமான பாலியல் அத்துமீறல்களால் டேனியலாவின் முக்கிய ரத்த நாளம் வெடித்து, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகள் வீட்டிற்கு வந்தபோது, தாய் வாட்டர்பெட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்ததைக் கண்டு அலறித் துடித்துள்ளார். விசாரணையில், மனைவி இறந்த அன்றைய இரவிலும், “அவள் செத்த பிணம் போலக் கிடக்கிறாள், மது கொடுத்துள்ளேன்… வந்து உடலுறவு கொள்” என்று பக்கத்து வீட்டுக்காரருக்கு ராபர்ட் அனுப்பிய அதிர்ச்சி மெசேஜ்களை போலிஸார் கைப்பற்றினர்.

   

இதனையடுத்து ராபர்ட்டை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவரது முன்னாள் மனைவியும், “ராபர்ட் தன்னை மனைவிகள் பரிமாற்றத்திற்கு வற்புறுத்தியதாகவும், மறுத்ததால் தாடை எலும்பு முறியும் அளவுக்குத் தாக்கியதாகவும்” வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவியை மிருகத்தனமாகப் பயன்படுத்திக் கொன்ற இந்த ராபர்ட்டின் கொடூர செயல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.