மாமனார் சடலமாகக் கிடந்தபோது பார்ட்டியில் டான்ஸ் ஆடிய மருமகள்… 309 போன் கால்கள்… 49 வாட்ஸ்அப் மெசேஜ்கள் உடைத்த பயங்கர உண்மை…!

By Nanthini on புரட்டாதி 12, 2026

Spread the love

கான்பூரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் வினீத் மனோச்சா கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை வழக்கின் பின்னணியில் அவரது மருமகள் ஷாலு செயல்பட்டிருப்பது தெரியவந்ததையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இரவு நேர பார்ட்டிகளுக்குச் செல்லும் வழக்கம் கொண்ட ஷாலுவை, மாமனார் வினீத் மனோச்சா கண்டித்ததே இந்த கொலைக்கு முதன்மை காரணமாகக் கூறப்படுகிறது. மருமகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வீட்டில் சிசிடிவி (CCTV) கேமராக்களை மாமனார் பொருத்தியதால் ஆத்திரமடைந்த ஷாலு, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டம் தீட்டியுள்ளார்.

   

இந்தக் கொலையை அரங்கேற்ற தனது மாமனாரின் முன்னாள் ஊழியரான விஷால் கவுதம் என்பவரை ஷாலு பயன்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த மே 1-ஆம் தேதி முதல் கொலை நடந்த நாள் வரை, ஷாலுவும் விஷாலும் 309 முறை தொலைபேசியில் பேசியிருப்பது காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கொலைத் திட்டம் தொடர்பாக 49 வாட்ஸ்அப் மெசேஜ்களையும் ஷாலு அனுப்பியுள்ளார். ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அந்தச் செய்திகள் அனைத்தையும் அவர் உடனுக்குடன் டெலிட் செய்துவிட்ட நிலையில், சைபர் கிரைம் உதவியுடன் அவற்றை மீட்டெடுக்கும் முயற்சிகளில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுமார் மூன்று மாதங்களாகத் திட்டமிட்டு இந்தச் சதியை ஷாலு அரங்கேற்றியுள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கொலையைச் செயல்படுத்திய முன்னாள் ஊழியர் விஷால் கவுதமுடன் ஷாலு எவ்வாறு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார், கொலையை நிறைவேற்ற வேறு யாரேனும் உதவினார்களா, மற்றும் இதற்காகப் பணப் பரிவர்த்தனைகள் ஏதும் நடந்ததா என்பது குறித்து காவல் துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. கொலை சதியில் தொடர்புடைய மற்ற நபர்களைக் கண்டறியும் பணியும் தற்பொழுது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

   

இவ்வழக்கில் ஷாலுவின் கணவர் சுப்ரத் மனோச்சாவின் பங்கு குறித்தும் காவல் துறையினருக்கு வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. குற்றம் சாட்டப்பட்ட விஷாலுக்கு சுப்ரத் ஏற்கனவே இரண்டு முறை வேலை வாங்கித் தந்துள்ளதால், அவருக்கும் இந்தச் சதியில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சுப்ரத்தின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் மற்றும் அவரது நடமாட்டங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதுவரை சுப்ரத்திற்குத் தொடர்பு இல்லை என்று காவல் துறை முழுமையாக மறுக்காததால், அவரது பங்களிப்பு மீதான விசாரணைத் வளையம் இறுகியுள்ளது.

 

கொலை நடந்த இரவில், மருந்து வியாபாரிகளின் குடும்பத்தினர் பங்கேற்ற பிரம்மாண்ட இரவு விருந்தில் ஷாலுவும் அவரது கணவர் சுப்ரத்தும் கலந்து கொண்டுள்ளனர். அதிகாலை 3 மணி வரை நீடித்த அந்த விருந்தில், எந்தவிதப் பதற்றமும் இன்றி உணவருந்தி, நடனமாடி அவர்கள் இயல்பாக இருந்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகளின் பின்னணியில் உள்ள உண்மைகளைக் கண்டறிய, ஷாலுவை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 100-க்கும் மேற்பட்ட விரிவான கேள்விகள் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், ஷாலு அளிக்கும் பதில்களே இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும்.