“என்கூட குடும்பம் நடந்த வாடி”… மனைவி தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று கணவர் செய்த கொடூரச் செயல்… ஊரே அலறிய சம்பவம்…!

Spread the love

பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறில் தனது மனைவி மற்றும் மச்சினனை அரிவாளால் கொடூரமாக வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மஞ்சநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வீரமுத்து என்பவருக்கும், அவரது மனைவி சிவமணிக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில், சிவமணியின் தம்பி கண்ணப்பனுக்கு ஏற்பட்ட விபத்து இந்த மோதலுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

கோடங்கிபட்டியில் வசித்து வரும் தம்பி கண்ணப்பனுக்கு விபத்து ஏற்பட்டதால், அவரைப் பராமரிப்பதற்காக சிவமணி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்துள்ளார். மனைவி நீண்ட நாட்களாக வீடு திரும்பாததால் ஆத்திரமடைந்த வீரமுத்து, அவருக்கும் சிவமணிக்கும் இடையே அடிக்கடி தொலைபேசி வாயிலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விரிசல் காரணமாக இருவரிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து, ஒருவிதமான பதற்றமான சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில், இன்று காலை கோடங்கிபட்டிக்கு நேரில் சென்ற வீரமுத்து, தனது மனைவியை உடனடியாக வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் வெடித்தது. ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற வீரமுத்து, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவமணியை சரமாரியாக வெட்டினார். தனது அக்காவை காப்பாற்ற ஓடிவந்த தம்பி கண்ணப்பனையும் வீரமுத்து விடாமல் தலையில் வெட்டிச் சாய்த்தார்.

இரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இச்சம்பவம் குறித்து ஆழியார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோட முயன்ற வீரமுத்துவை கைது செய்தனர். குடும்பப் பிரச்சனையில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

50 minutes ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

51 minutes ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

55 minutes ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

1 மணத்தியாலம் ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

1 மணத்தியாலம் ago

“5 பேருக்கு திமுக காசு கொடுத்துருச்சு!.. 2 பேருக்கு அதிமுக காசு கொடுத்துருச்சு”… நாளைக்கு இருக்கு பெரிய ஆப்பு… எக்சிட் போல் கணிப்புகளை ஓப்பனாக கலாய்த்த விமர்சகர்கள்…!!!

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…

1 மணத்தியாலம் ago