“அப்பா… விட்டுருப்பா….” ஓடும் அரசுப் பேருந்தில் ரத்தவெறி ஆட்டம்…! மனைவி, மகளை அரிவாளால் வெட்டிய கணவன்…. பயணிகள் கண்ணெதிரே அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 2, 2026

Spread the love

தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த மணிக்குமார் (36) என்பவருக்கும், அவரது மனைவி சந்திரலேகா (33) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் சந்திரலேகா திருப்பூரில் வசித்து வந்த நிலையில், குழந்தைகள் தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சந்திரலேகா தனது மகள் சஞ்சனா ஸ்ரீயுடன் திருப்பூரிலிருந்து தேவாரம் நோக்கி அரசுப் பேருந்தில் பயணிப்பதாக மணிக்குமாருக்குத் தகவல் கிடைத்தது.

இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பேருந்து சென்றபோது உள்ளே நுழைந்த மணிக்குமார், சந்திரலேகாவிடம் தகராறில் ஈடுபட்டுத் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். தடுத்த மகளுக்கும் வெட்டு விழுந்த நிலையில், பேருந்தை நேராகக் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்ற பயணிகள், தப்பிக்க முயன்ற மணிக்குமாரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த தாய் மற்றும் மகளுக்கு வத்தலக்குண்டுவில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திலேயே மணிக்குமாரைக் கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.