“மனைவியின் கள்ளக்காதலனுடன் மோதல்…” மாமியார் வீட்டில் கணவர் இருந்த கோலம்…. இரவில் நடந்த தகராறில் ஹாஸ்பிட்டலில் காதலன்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on புரட்டாதி 5, 2026

Spread the love

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் (26) என்பவருக்கும், காவியா என்ற பெண்ணிற்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பாலச்சந்திரன் ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வந்த நிலையில், காவியாவிற்கு ஆட்டோ ஓட்டுநரான வசந்த் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் பாலச்சந்திரனுக்குத் தெரியவரவே, கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றிரவு பாலச்சந்திரனுக்கும் மனைவியின் கள்ளக்காதலன் வசந்துக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் பாலச்சந்திரன் தாக்கியதில் காயமடைந்த வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

   

இதனைத் தொடர்ந்து, மாமியார் வீட்டில் இருந்த பாலச்சந்திரன் இன்று காலை சிமெண்ட் கூரை கம்பியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த ஆம்பூர் நகர போலீசார், இது தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனப் பல கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.