10 ஆண்டுகளுக்கு பின்… துறவி வேடமிட்டு மனைவியை பார்க்க சென்ற கணவர்… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

By Soundarya on ஆவணி 7, 2025

Spread the love

டெல்லியில் உள்ள நெப் சராய் பகுதியை சேர்ந்தவர் பிரமோத்(55).இவருடைய மனைவி கிரண். இந்த தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பிரமோத் தன்னுடைய மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் கிரண் தனது மகன் மற்றும் மருமகளோடு வசித்து வந்துள்ளார்.  இந்த நிலையில் பிரமோத் 10 வருடங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 1ம் தேதி அன்று தன்னுடைய வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் துறவி போல மாறு வேடம் விட்டு வந்து தன்னுடைய மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்துள்ளார். அதிகாலை 12 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது மனைவி கிரண் தன்னோடு வர வேண்டும் என்று பிரமோத் சமாதானப்படுத்த முயன்றுள்ளார். அதற்கு கிரண் மறுத்ததால் வந்த சண்டையில் தான் மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் குற்றம் சாட்டப்பட்ட பிரமோத் நள்ளிரவு 12.50 மணியளவில் தன்னுடைய மனைவியின் வீட்டில் இருந்து தப்பித்து செல்வது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.