சென்னையில் உள்ள திருவொற்றியூர் பெரியார் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28) . இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். தற்போது அனுசுயாவின் தம்பியின் நண்பரான முகேஷ், அவருடைய குடும்பத்த தகராறினால் தன் மனைவியைப் பிரிந்து கடந்த மூன்று மாதங்களாக அனுசுயாவின் வீட்டில் தங்கி வந்துள்ளார். அவரையும் தம்பி என்று அனுசியா அழைத்து வந்ததாகவும் தெரிகிறது. இத்தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் முகேஷ் என்பவர் அனுஷியாவையும் அவருடைய இரண்டு குழந்தைகளையும் திருவெற்றியூர் தேரடி பகுதிக்கு அழைத்துச் சென்று துணிக்கடையில் துணி வாங்கிக் கொடுத்ததாக தெரிய வருகிறது. இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக திருவெற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
வெங்கடேஷ் தற்கொலைக்கு முன்பு மனைவிக்கு எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கி உள்ளது. கடிதத்தில் தம்பி தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்து விட்டாயே, என் சாவுக்கு காரணம் முகேஷ் என எழுதி இருந்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்படவிருந்த இண்டிகோ விமானத்தில் (6E-2131), விமானம் ஓடுதளத்தில் நகர்ந்து கொண்டிருந்தபோது ஒரு பயணியின் கைப்பையில்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…